சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்த நிலையில் இன்றும் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 குறைந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் 54,800 ரூபாய்க்கும் ஒரு கிராம் 6850 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 7305 ரூபாய்க்கும், ஒரு சவரன் 58,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் 96 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.