
சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு கடந்த வாரம் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி சர்ச்சையில் சிக்கினார். அவர் மீது வந்த புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை போலீசார் மகாவிஷ்ணுவை கைது செய்தனர். இந்த விவகாரம் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் விசாரணை நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவு பிறப்பித்தார்.
இது தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டது. இனி வரும் காலங்களில் பள்ளிகளில் அது போன்ற நடக்காமல் இருப்பதற்காக புதிய வழிமுறைகள் வகுக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார். இந்த நிலையில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தஞ்சாவூர் சரபோஜி நூலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.