இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது மிகவும் அதிகமாகிவிட்ட நிலையில் பல்வேறு தரப்பினரும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அதில் வெளியாகும் பல வீடியோக்கள் சில சமயங்களில் நம்மை வியப்படைய வைப்பதாகவும் எப்படி இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று சிந்திக்க வைப்பதாகவும் அமைகிறது. அந்த வகையில் தற்போது youtube இல் ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு கண்ணாடி பாட்டிலை ஒருவர் உடைக்கிறார். அந்த உடைந்த கண்ணாடி பாட்டிலில் ஒரு சிறிய தூண்டினை மட்டும் அவர் எடுத்து அதனை வைரமாக மாற்றுகிறார். இதற்காக அவர் தன்னுடைய கடின உழைப்பை போடுகிறார் என்பது உண்மைதான். அதன் பிறகு அந்த வைரத்தை அவர் ஒரு செயினில் வைத்து விட்டார். இந்த வீடியோவுக்கு பலரும் லைக்ஸ் களை குவித்து  வருகிறார்கள். மேலும் அந்த ஆர்டிஸ்ட்டுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.