குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சபர்கந்தா மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிய ஒரு பாலத்தை தம்பதி காரில் கடந்து சென்றுள்ளனர். அங்கு வெள்ளம் அதிகமாக இருந்ததால் நீரோட்டத்தில் கார் அடித்து செல்லப்பட்டது. அந்த கார் முழுமையாக மூழ்கிய நிலையில் மேற்கூரை மட்டும் சற்று தெரிந்தது.

அந்தக் காரின் மேற்கூரையில் தம்பதி அமர்ந்திருந்தனர். அவர்கள் நீண்ட தூரத்தில் காரின் மேற்கூரையின் மீது சுமார் 2 மணி நேரமாக அமர்ந்திருந்த நிலையில் அதிகாரிகள் வரும் வரை அப்படியே உட்காருந்திருந்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீர்மட்டம் குறையும் வரை காத்திருந்து அவர்களை பத்திரமாக மீட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்தான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.