ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் சத்தியவேடு தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதிமூலம். இவர் ஒரு பெண்ணை ஹோட்டலில் வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி மிகவும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முதல் வருமான சந்திரபாபு நாயுடுவிடம் புகார் கொடுத்தார்.
அந்தப் பெண் தனக்கு நீதி கிடைக்காவிட்டால் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தின் முன்பாக தீக்குளிப்பேன் என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து எம்எல்ஏ ஆதிமூலத்தை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அவர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோவில் அவருடைய முகம் தெளிவாக பதிவாகியிருந்த நிலையில் ஆளும் கட்சியை எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்து வருகிறது. இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
