தமிழ் சினிமாவின் பிரபலமான வில்லன் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மோகன் நடராஜன். இவருக்கு 71 வயது ஆகும் நிலையில் உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார்.  இவர் கண்ணுக்குள் நிலவு, ஆழ்வார், வேல் மற்றும் தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ள நிலையில், கிழக்குக்கரை, சிட்டிசன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து மிரட்டி உள்ளார்.

இவருடைய உடல் அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள அவருடைய வீட்டிற்கு நடிகர் சூர்யா இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்‌. நடிகர் சூர்யாவின் வேல் படத்தை அவர் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.