பிசிசிஐ ஓய்வு பெற்ற ஐபிஎல் வீரர்கள் விளையாடும் புதிய ஐபிஎல் தொடரை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஒய்வு பெற்ற இந்திய அணியின் வீரர்கள் வெளிநாடுகளில் விளையாடுவதற்கு பதில் இந்தியாவில் விளையாட விரும்புகிறார்கள்.

இது தொடர்பாக அவர்கள் பிசிசிஐ நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் இனிவரும் காலத்தில் முன்னாள் வீரர்கள் விளையாடும் ஐபிஎல் தொடரை உருவாக்க திட்டமிட்டுள்ளதாம்.

இந்த தொடரில் ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டும் விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜென்ட்ஸ் தொடரில் ‌ பாகிஸ்தானை வீழ்த்தி யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்