காதலிக்கு ஐ போன் வாங்க தாயின் செயினை திருடி ஒன்பதாம் வகுப்பு மாணவர் விற்ற சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் தனது காதலியின் பிறந்தநாளுக்கு ஐபோன் பரிசளிப்பதற்காக ஒன்பதாம் வகுப்பு மாணவன் தாயின் நகைகளை திருடி விற்றுள்ளான்.

வீட்டிற்கு தெரியாமல் செயின், மோதிரம், காதணிகளை எடுத்துக்கொண்டு வெவ்வேறு கடைகளில் விற்று பணம் ஆக்கியுள்ளார். சிறுவனின் தந்தை உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் தாயின் கஷ்டத்தை பொருட்படுத்தாமல் தங்க நகைகளை விற்று உள்ளான். தாயிடம் பணத்தை கேட்ட போது தர மறுத்ததால் ஆத்திரமடைந்து நகைகளை திருடியதாக மாணவன் போலீசாரிடம் கூறியுள்ளான்.