இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் இதனை பயன்படுத்திக்கொண்டு மோசடி கும்பல் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதனை அறியாத மக்கள் பலவிதமான மோசடிகளில் சிக்கி தங்களுடைய பணத்தை இழந்து விடுகிறார்கள். தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி தற்போது போலீஸ் ஸ்கிரீன் சாட் அனுப்பி அப்பாவி மக்கள் வங்கி பணத்தை மறுமணவர்கள் திருடுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 200 ரூபாய் மற்றும் ரூ.400 என தவறாக பணம் அனுப்பி விட்டதாக கூறி முதலில் ஸ்கிரீன்ஷாட் அனுப்புவதாக சைபர் கிரைம் போலீசார் கூறியுள்ள நிலையில் பிறகு அந்த பணத்தை திருப்பி அனுப்ப க்யூ ஆர் கோடு ஒன்றை அனுப்புகின்றனர். அதை நம்பி அதில் பணம் அனுப்பினால் வங்கி பணம் மொத்தத்தையும் திருடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.