கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் நிலச்சரிப்பு ஏற்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

சமீபத்தில் கர்நாடக அரசு நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்களுக்கு 100 வீடுகள் கட்டித் தருவதாக கூறியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் பெரிய பணக்காரராக இருப்பவர்களுள் ஒருவர் பாபி செம்மனூர். இவர் திருச்சூரில் நகைக்கடை ஒன்று வைத்திருக்கிறார். இவர் டாக்டர் பட்டம் பெற்றதோடு, சமூக சேவைகளும் செய்து வருகிறார்.

இதையடுத்து ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுமார் 811 கி.மீ ஓடியுள்ளார். அதோடு  வயநாட்டில் சுமார் 1000 ஏக்கரில் தேயிலை தோட்டம் வைத்திருக்கிறார். தற்போது இவர் நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்களில் 100 பேருக்கு தனது நிலத்தை குடுக்க முன்வந்துள்ளார்.

அதோடு அந்த நிலங்களில் வீடுகள் கட்டுவதற்கு உதவி செய்யப்படும் என்றார். இதற்கு தற்போது பாதிக்கப்பட்டவர்களின் விவரம் குறித்து சேகரிக்கப்படுகிறது. மேலும் தற்போது நடைபெற்று வரும் மீட்பு பணிகள் முடித்த பிறகு,  வீடுகளின் கட்டுமான பணிகள் தொடரும் அறிவித்துள்ளார்.