இயக்குனர்கள் கங்கை அமரனின் இளைய மகன் தான் பிரேம்ஜி. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருகின்றார். தற்போது சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். இந்த நிலையில் நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்த பிரேம்ஜி அண்மையில் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தன்னுடைய ஆசை மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் பிரேம்ஜியின் பேட்டிகளை பார்த்துவிட்டு தன் மகளை கொடுக்கக் கூடாது என்று நினைத்ததாக அவருடைய மாமியார் ஷர்மிளா தெரிவித்துள்ளார். பழகிப் பார்த்த பிறகே பிரேம்ஜி தங்கமானவர் என்பதை உணர்ந்ததாகவும் மகள் தன்னை ஏதாவது வேலை செய்ய சொன்னால் கூட பெரியவர்களை ஏன் வேலை வாங்குகிறாய் என்று கோபப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரேம்ஜி இடம் பிடித்த விஷயமே அவர் மரியாதையாக நடந்து கொள்வது தான் என்று கூறியுள்ளார்.