
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த பகுதியில் மீட்பு பணிகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் நிவாரண பணிகளை மேற்கொள்ள உதவி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததோடு ரூ.5 கோடி நிவாரண உதவிக்காக கொடுத்தார்.
இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது வயநாடு பகுதியில் வெள்ள நிவாரண பணிகளுக்காக தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் அந்த பகுதியில் மீட்பு பணிகளுக்காக காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.