2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதில் அனைத்து துறைகளுக்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டது. அதேசமயம் சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெறும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த நிலையில் வீடு விற்பனைக்கான நீண்ட கால மூலதன ஆதாய வரி 20 சதவீதத்திலிருந்து 12.5% ஆக குறைக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதே நேரம் இன்டெக்ஸ் முறை நீக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது வீடு விற்பனையின்போது பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு மீதமுள்ள லாபத்திற்கும் மட்டும் இதுவரை வரி செலுத்த வேண்டி இருந்தது. தற்போது பணவீக்கத்தை கருத்தில் கொள்ளாமல் 12.5 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது