
நாடாளுமன்றத்தில் இன்று மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் திமுக கட்சியின் எம்பி வில்சன் தமிழக அரசுக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதி குறித்து நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
அதாவது கடந்த 3 வருடங்களாக பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு மெட்ரோ ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் ரூ.63,216 கோடியில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே மத்திய அரசு ஒப்புக்கொண்டபடி 50 சதவீத நிதியை விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.