தமிழகத்தில் மின்கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மும்முனை இணைப்புக்கான டெபாசிட் அதிகரித்துள்ளது. அதன்படி ரூ.2,145 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்குவதற்கான ஒரு முனை கட்டணம் ரூ.1020-ல் இருந்து ரூ.1070 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று மும்முனை மின்சார இணைப்பு கட்டணம் ரூ.1535-ல் இருந்து ரூ.1610 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோன்று ஒருமுனை இணைப்புக்கு டெபாசிட் கட்டணம் ரூ.765-ல் இருந்து ரூ.800 ஆகவும், மும்முனை இணைப்புக்கான டெபாசிட் கட்டணம் ரூ.2045-ல் இருந்து ரூ.2,145 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒரு மீட்டரை மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கான ஒருமுனை கட்டணம் ரூ.1070 ஆகவும், மும்முனை இணைப்புக்கான கட்டணம் ரூ.1610 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மின் இணைப்பில் பெயர் மாற்றத்திற்கான கட்டணமும் ரூ.645 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
