
சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே வீட்டில் ஒரு செல்லப் பிராணியை வளர்க்க வேண்டும் என்றால் பலரின் தேர்வு நாயாக தான் இருக்கும்.
நாய் என்பது நன்றியுள்ள பிராணி என்பதை காட்டிலும் அறிவுள்ள செல்லப்பிராணி என்றும் கூற வேண்டும். நாய்கள் பேசுவது உண்டு. ஆனால் அதனுடன் நெருங்கி பழகுபவர்கள் மட்டும்தான் அதனை புரிந்து கொள்ள முடியும். நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில் மிக நெருக்கமான தொடர்பு உள்ளது. அப்படி அறிவியல் மிஞ்சிய செல்லப்பிராணி நாய் தனது உரிமையாளரின் குழந்தையுடன் கண்ணாம் பூச்சி விளையாடுற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Playing hide and seek with a best friend
pic.twitter.com/ug3MxquwKI— Science girl (@gunsnrosesgirl3) July 5, 2024