உத்திரபிரதேசம் மாநிலத்தில் உச்சகட்ட கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உத்திரபிரதேசம் ஆக்ரா அருகே உள்ள நாம்நேர் சந்திப்பில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த 80 வயது முதியவரை குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த முதியவர் கூச்சலிட்ட நிலையில் அந்த போதை இளைஞன் வலுக்கட்டாயமாக தன்னுடைய ஆசையை தணித்து கொண்டான்.

சத்தம் கேட்டு வந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட முதியவர் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.