
பிரிட்டன் நாட்டில் கைலா பிளைத் என்ற சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு 17 வயது ஆகிறது. இவருக்கு தற்போது நுரையீரலில் ஓட்டை விழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதற்கான காரணமும் தெரிய வந்துள்ளது. அதாவது சிறுமி ஒரு வாரத்திற்கு 400 சிகரெட்டுகள் வரை பிடித்துள்ளார். இந்த சிறுமி கடந்த மே மாதம் 11-ம் தேதி தன்னுடைய தோழி ஒருவரின் வீட்டில் இருந்துள்ளார். அப்போது கடுமையான வயிற்று வலி காரணமாக மயங்கி விழுந்தார்.
உடனே அந்த சிறுமியை வீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது நுரையீரலில் ஓட்டை விழுந்ததாக மருத்துவர்கள் கூறினர். இந்த சிறுமி அளவுக்கு அதிகமான சிகரெட் புகையை உள்ளிழுத்துள்ளார். அதன்படி ஒரு வாரத்துக்கு 4000 பஃப்க்கள் வரை உள்ளிழுத்துள்ளார். இதைத்தொடர்ந்து நுரையீரல் ஓட்டை பெரிதாகாமல் இருப்பதற்காக சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின் மூலம் நுரையீரலில் ஒரு பாதியை மருத்துவர்கள் அகற்றினர். இதன் மூலம் சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர்ப்பிளைத்துள்ளார்.
