பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை நிலவுகிறது. அதன் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் மழையின் அளவு குறைந்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. தற்போது நீர்வரத்து 608 கன அடியாக குறைந்துள்ளது.
இந்நிலையில் கீழ் பவானி கால்வாயில் பாசனத்திற்கு 5 கன அடி வீதமும், காளிங்கராயன் கால்வாய் மற்றும் அரசன் கோட்டை கடற்கரை கால்வாய் ஆகிய பாசனங்களுக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பவானி ஆற்றில் குடிநீருக்காக மட்டும் 150 கன அடி நீர் மட்டும் திறக்கப்பட்டுள்ளது.
