நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி தொடங்கியுள்ளது.

மொத்தம் உள்ள 175 தொகுதிகளுக்கு மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்த நிலையில் இதில் ஜகன்மோகனின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும், பவன் கல்யாணின் ஜனசேனாவும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. ஜெகன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வாரா அல்லது சந்திரபாபு நாயுடு ஆட்சியை கைப்பற்றுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்