பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பல விமர்சனங்களை பெற்று வருகிறார். மும்பை அணிக்கு அவர் கேப்டன் ஆனதை அடுத்து பல வகையான விமர்சனங்கள் அவர் மீது எழுந்து கொண்டே வருகிறது. உலகப் உலக கோப்பை டி20 இன்னும் சில நாட்களில் தொடங்கும் நேரத்தில் அவரும் அவருடைய மனைவியும் விவகாரத்தை பெற இருப்பதாக செய்தி வெளியாகி காட்டுத் போல பரவி வருகிறது. ஆனால் இது தொடர்பாக இருவரும் இதுவரை எதுவும் பேசவில்லை.
இந்த நிலையில் நடிகர் மற்றும் சமூக ஊடாக பிரபலம் ரோஹித் குப்தா கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அதாவது, ஐபிஎல் 2024 சீசன் அவமானத்தை தொடர்ந்து களங்கமடைந்த தன்னுடைய இமேஜை சரி செய்து கொள்வதற்காக ஹர்திக் பாண்டியா தன்னுடைய மனைவியை பயன்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், ஹர்திக்கின் பிஆர் குழு வேண்டுமென்றே ஒரு கதை அமைத்து பரவ விட்டுள்ளது. தற்போது அவர்களின் மௌனமே இது ஒரு கதைதான் என்பதை காட்டுகிறது என்று விமர்சித்துள்ளார்.
View this post on Instagram
