கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது வாலிபருக்கும் 16 வயது சிறுமி ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தை முன்னிட்டு இரு வீட்டாரும் சேர்ந்து நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்தனர். அப்போது குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் வந்து குழந்தை திருமணம் செய்யக்கூடாது எனக் கூறி நிச்சயதார்த்தத்தை நிறுத்தியதோடு சிறுமியின் பெற்றோருக்கும் அறிவுரை கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த மணமகன் அன்று இரவு சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளார். பிறகு சிறுமியை கொடூரமாக கொலை செய்து தலையை துண்டாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள வாலிபரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.