இந்தியாவிலும் உலகின் 91 நாடுகளிலும் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இன்று மதியம் 12 மணியளவில் புதிய ஸ்பைவேர் தாக்குதல் எச்சரிக்கை தகவலை அந்த நிறுவனம் அனுப்பி இருந்தது. அதில் உங்களுடைய ஆப்பிள் ஐடியுடன் தொடர்புடைய ஐபோனை தொலைதூரத்தில் இருந்தே ஊடுருவ முயற்சிக்கும் கூலிப்படையின் ஸ்பைவேர் தாக்குதலால் நீங்கள் குறி வைக்கப்படுவதை ஆப்பிள் நிறுவனம் கண்டறிந்துள்ளது. நீங்கள் யார் அல்லது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது காரணமாக இந்த தாக்குதல் குறிப்பாக உங்களை குறி வைத்து இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.