
AI தொழில்நுட்பத்தின் வருகையுடன் உண்மையான மற்றும் செயற்கை வீடியோவை வேறுபடுத்துவது கடினமாகிவிட்டது. இதனை சரி பார்க்கும் வகையில் யூடியூப் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. பயனர்கள் அசல் உள்ளடக்கம் மற்றும் AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோவை வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளது. AI மூலம் ஏதேனும் உருவாக்கப்பட்டால் சேனலை நிர்வாகிப்பவர்கள் அதை வெளிப்படுத்த வேண்டும். இதற்கு அவர்கள் கிரியேட்டர் ஸ்டூடியோவில் ஒரு புதிய கருவியை கொண்டு வந்துள்ளனர்.