இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணம் பரிவர்த்தனை என்பது அதிகரித்துவிட்டது. பெரும்பாலான மக்கள் UPI சேவைகளை பயன்படுத்துகின்றனர். உங்களுடைய மொபைலில் யுபிஐ அப்ளிகேஷன் இருந்தால் பணம் பரிமாற்றம் என்பது மிகவும் எளிது. யுபிஐ கட்டண முறையை பயன்படுத்துவதற்கு UPI பின் தேவை. UPI பதிவின்போது பயனர் அமைத்த தனிப்பட்ட குறியீடு இதுவாகும். ஆனால் உங்களுடைய யுபிஐ பின்னை மறந்துவிட்டால் அல்லது மாற்ற வேண்டி இருந்தால் என்ன செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

யுபிஐ பின்னை மாற்றுவதற்கு யுபிஐ சேவைகளை வழங்கும் mobile application ஐ திறக்க வேண்டும்.

முகப்புத் திரையில் profile விருப்பத்தை தேர்வு செய்து UPI பின்னை மாற்ற விரும்பும் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Change UPI PIN அல்லது Reset UPI PIN என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் ATM அல்லது debit card விவரங்கள் உட்பட தேவையான தகவல்களைஅளிக்க வேண்டும்.

 

இதனை சமர்ப்பித்த பின்னர் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP ஐ உள்ளிடவும்.

பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்கிற்கு புதிய 4 அல்லது 6 இலக்க UPI பின்னைத் தேர்ந்தெடுக்கவும்.

பிறகு புதிய பின்னை உறுதிப்படுத்தவும். இப்போது நீங்கள் அனைத்து செயல்முறைகளையும் முடித்துவிட்டீர்கள்.