இந்தியாவின் முன்னணியில் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி 118 ரூபாய் மற்றும் 289 ரூபாய் திட்டங்களின் விலைகள் தற்போது 129 ரூபாய் மற்றும் 329 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை ஏர்டெல் உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
