இணையத்திலிருந்து செயலிகளை ஐபோனில் பதிவிறக்கம் செய்யும் அம்சத்தை ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக அறிமுகப்படுத்துகின்றது. ஆண்ட்ராய்டு போனை போல ப்ளே ஸ்டோரில் இருந்து செயலிகளை ஐபோன்களில் தரவிறக்கம் செய்ய முடியாது என்ற நிலை நீடித்தது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய விதிகளுக்கு இணங்க இந்த கட்டுப்பாட்டுக்கு ஆப்பிள் விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த வசதி ஐரோப்பாவுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் கூறப்படுகிறது.