
பிரதமர் மோடி இன்று தமிழகம் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் கருப்புக்கொடி போராட்டம் நடத்த உள்ளனர். இலங்கை கடற்படையால் கடந்த பத்து ஆண்டுகளில் 3179 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து மீனவர்களை காக்க தவறிய மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.