
தமிழகத்திற்கு முதல் கட்டமாக 22,000 டன் பாரத் அரிசியை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரிசி விலை தற்போது தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் பாரத் அரிசி என்ற பெயரில் ஒரு கிலோ அரிசியை 29 ரூபாய்க்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தேசிய வேளாண் கூட்டுறவு இணையம் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இவர்கள் ஐந்து மற்றும் பத்து கிலோ மூட்டைகளாக வேன்களில் எடுத்துச் சென்று விற்பனை செய்ய உள்ளனர்.