செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 2026இல் யார் தேர்தலில் போட்டியிட்டாலும்,எங்க ஓட்டில் யாரும் கை வைக்க முடியாது. மொத அத தெரிஞ்சுக்கோங்க…  எங்களுக்குன்னு பேஸ் ஓட்டு இருக்கு. அது காலம் காலமாக எங்களுடைய தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்….  அதே போன்று எங்களுடைய தலைவி, தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மா…

புரட்சித்தலைவர் உருவாக்கிய இயக்கம்,  ஒரு கட்டுக்கோப்பாக அம்மா அவர்கள் அந்த இயக்கத்தை கட்டி காத்து,  1 1/2 கோடிக்கு மேற்பட்ட தொண்டர்களாக உருவாக்கி…. இன்றைக்கு அண்ணன் எடப்பாடி யார் தலைமையில் இரண்டு கோடிக்கு மேற்பட்ட தொண்டர்கள் இருக்கின்ற நிலையில்,  எங்களின்  அடிப்படையான பேஸ் ஓட்டில்  யாரும் கை வைக்க முடியாது.

எனவே  யார் வேணாலும் கட்சி ஆரம்பிக்கட்டும்,  எங்களுடைய ஓட்டுகள் என்பது யாரும் பிரிக்க முடியாது. நடுநிலையாளர்கள்  ஓட்டை பார்த்தீர்கள் என்றால், ஆட்சியினுடைய நிலைமையை இன்னைக்கு சீர் தூக்கி பார்ப்பார்கள்.  இன்னைக்கு எல்லோரும் கஷ்டப்படுறாங்க…  யாருக்கு கஷ்டம் இல்லை….  விடியா அரசு எல்லாரையும்  கஷ்டப்படுத்திட்டு….  ஏழை – எளிய –  நடுத்தர மக்கள் எல்லோருமே கஷ்டத்துல இருந்துகிட்டு இருக்காங்க என பேசினார்.