செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்றத்தில் நான்  தாய்மொழி தமிழில் பேச நீங்க அனுமதிப்பீர்களா ?  கொக்கரிக்கிறீங்க…. சிரிக்கிறீங்க…..  பாராளுமன்ற கட்டிடத்துல நீங்க ஒரு கல்வெட்டு வச்சிருக்கீங்க…  சமஸ்கிருதத்தில் இருக்கு, ஹிந்தியில் இருக்கு… இங்கிலீஷ்ல இருக்கு …. அப்போ உலகத்தின் மூத்த மொழி,  இந்திய மொழிகளில் மிகத் தொன்மையான மொழி…..

ஏன் அவங்க தமிழ்ல ஒரு கல்வெட்டு வைக்கவில்லை  ராஜா…. தமிழ் மீது அளப்பரிய  பற்றுக்கொண்டவரிடம் தம்பி அண்ணாமலை சொல்லி,  பக்கத்துல தமிழ்ல ஒரு கல்வெட்டு வைக்க சொல்ல வேண்டியதானே,  இதெல்லாம் சும்மா சொல்றது.. இது புதுசு இல்லையே…. இது ஒன்னும் புதுசில்ல…. இஸ்லாமிய பெண்கள் போல குர்கா போட்டுக்கிட்டு பேசுறது,  வழக்கு தொடுக்கிறது,  இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடுக்கிறது…. அவுங்க காருக்கு அவங்களே பாம் வச்சு கொளுத்திகிட்டு… தீ வைத்து கொளுத்திகிட்டு…  என் காருக்கு தீ வைத்து விட்டார்கள் என்று   சொல்றது இதெல்லாம் ஒன்னும் புதுசு இல்லையே….

இஸ்லாமியர் இல்லாத….. ராமர் இல்லாத… ஏதாவது ஒரு அரசியல் இருக்கா ? ராமர் இல்லாத….  இஸ்லாமியர் எதிர்ப்பு இல்லாத அரசியல் இருக்கா ? ராமர்  கடவுள் எல்லாம் கிடையாது…  பிஜேபியின் உடைய பிராப்பர்ட்டி… அவங்க நெனச்சிட்டு இருக்காங்க…  ராமர் ஏதோ பிஜேபிக்கு மட்டும். அப்படிதான் ஆக்கி வச்சிருக்காங்க. அவர் ஒரு கடவுள் மாதிரி கருதுகிறார்களா ? நீங்க மட்டும் பிஜேபியை ஜெயிக்க வைங்க இலவச தரிசனம் என சொல்லுறான். அவரும் இலவசமாக்கிட்டாரு என விமர்சனம் செய்தார்.