
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நான் அரசியலில் 40 ஆண்டு காலம் இருக்கிறேன்… பல கட்சிகளில் இருந்தேன், சரிங்களா…. இனிமேல் எங்களுடைய நடவடிக்கை பயங்கரமாக இருக்கும். நாங்க தமிழ் தேசியத்தை கைவிடல…. அந்தந்த மாநில மக்கள் அவங்கவங்க தேசியம் தெரியணும்… தமிழன் பிரதமராகனும்….
ஒரு ஹரி பரந்தாமன் மாதிரி, பழ.கருப்பையா மாதிரி…. நல்லகண்ணு ஐயா மாதிரி….. மிக சிறந்த ஒருவர் எங்களுக்கு பிரதமரா கொண்டு வருவோம். இந்த தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் முயற்சி செய்வோம். இல்லை என்றால்,
வருகின்ற 2029 இல் நடக்கும் இதுக்கப்புறம் இல்லையா ? அதுல நாங்க 300 இடங்களில் போட்டியிடுவோம். இதே டெமாக்ரடிக்…. இந்தியன் டெமாக்ரடிக் டைகர்ஸ் ஆப் இந்தியா…. கண்டிப்பா நான் தான் சொன்னேனே…. முழு நேரமும் இந்த மக்களுக்காக உழைக்கிறதுக்காக நாங்க காத்துக்கிட்டு இருக்கோம். இது கிள்ளு கீரையாகவோ, எடுப்பார் கை பிள்ளையாகவோ இருக்க மாட்டோம் என தெரிவித்தார்.