திருமணம் செய்து கொள்வதற்காக சுமார் 8 km வரை ஓடியே வந்து திருமணம் செய்த பிரபலத்தின் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் அமீர்கானின் மகள் ஐராவும், பிட்னஸ் ட்ரெயினருமான  நுபுர் ஷிகாரேவும் காதலித்து வந்தார்கள். இவர்களுடைய காதலை இருவீட்டிலும் சொல்ல அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் பச்சைக்கொடி காண்பித்து நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை தொடர்ந்து மும்பையில் நடைபெற்ற இந்த திருமணம் மும்பையில் இருக்கும் 5 ஸ்டார் ஹோட்டலில் நடந்தது.

இந்த நிலையில் திருமணத்திற்காக மாப்பிள்ளை ஷார்ட்ஸ் அணிந்து வந்தது அங்கிருந்தவர்களுடைய கவனத்தை ஈர்த்தது . இது குறித்து விசாரிக்கையில் மாப்பிள்ளை திருமணம் நடக்கும் பகுதிக்கு ஓடியே வந்துள்ளார். திருமண ஆடையில் ஓடி வர முடியாத காரணத்தால் ஷார்ட்ஸ் உடன் ஓடிவந்துள்ளார். திருமணத்திற்காக சுமார் 8 கிலோமீட்டர் தூரம் ஓடிவந்த இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.