
1996 – 2001 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொன்முடிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால் எம்எல்ஏ அமைச்சர் பதவி பறிக்கப்படும். அதேபோல் தண்டனை காலம் முடிந்து 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுகவின் செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன்,
நீதிபதி ஆனந்த வெங்கடேசன் சொன்ன வழக்கு இன்னும் விசாரணையில் தான் இருக்கிறது. அதில் தீர்ப்பு வரவில்லை. இந்த வழக்கு அது இல்லாம இது இன்னொரு வழக்கு. இந்த வழக்கு 1996 -2001இல் சொத்து குறிப்பு செய்தார் என்று போடப்பட்ட வழக்கு. இதில் விடுதலை செய்தார்கள். 2016 விடுதலை செய்யப்பட்டார்கள். அதற்கு மேல் அப்போ இருந்த அதிமுக அரசு ஒரு அப்பீல் பண்ணி இருந்தாங்க. விடுதலைக்கு எதிராக அப்பில் மனு போட்டு இருந்தார்கள். அதில் தான் தீர்ப்பு சொல்லியுள்ளார்கள். அதில் தான் விடுதலை செல்லாது, இவருக்கு தண்டனை கொடுக்கணும்னு சொல்லி இருக்கிறார்கள்.
1996லே நடந்திருக்க கூடிய வழக்கு. விடுதலை செய்யப்பட்ட வழக்கில் இந்த நீதிபதி இப்படி ஒரு தீர்ப்பு கொடுத்துள்ளார். இவருக்கு மேல உச்ச நீதிமன்றம் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தை கண்டிப்பாக உடனடியாக நாட வேண்டும். தீர்ப்புகள் திருத்தப்படலாம் என்பதற்காகத்தான் அப்பீல் பர்மிஷன் கொடுத்திருக்காங்க. இதுக்கு மேல ஆப்பில் இருக்கு. இது நிரந்தர தீர்ப்பு கிடையாது, இதுக்கு மேல அப்பீல் இருக்கு.திமுக அரசு 2021 இல் பதவி ஏற்ற பிறகு சிறப்பான ஆட்சியை கொடுத்து கொண்டுள்ளது.
இந்த ஆட்சியின் மீது இவர்களால் எந்த குற்றத்தையும் சொல்ல முடியவில்லை. மக்கள் மத்தியில் விமர்சனத்தை உருவாக்க முடியவில்லை என்றதும், பழைய வழக்குகளை எல்லாம் தோண்டி, துருவி எடுத்து இப்படி நடக்கிறதா ? அப்படிங்கறத ஒரு சந்தேகம் இருக்கிறது. எதற்காக இது சொல்கிறோம் அப்படி என்றால்? எந்த அடிப்படையில் இதை சொல்கிறோம் என்றால்…. அதிமுக அதிமுக அமைச்சர்கள் மீது சொத்து குவிப்பு வழக்கு இருக்கின்றது. அதற்கு மேல கவர்னர் நான் ஜங்ஷன் கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறார்…
அதிமுக அமைச்சர்கள் ஊழல் வழக்குகள் இருக்கிறது…. அதற்கு மேல விசாரணை நடத்தலாமா? நடத்த முடியுமா ? என்றால் அங்கு தடை இருக்கிறது. இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.மக்கள் இதற்க்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியலை நன்கு புரிந்து கொள்வார்கள்… பொன்முடி அவர்கள் பாத்தீங்கன்னா…. தொடர்ந்து ஆளுநரை கடுமையாக விமர்சித்து வந்தார். உடனடியாக அவருக்கு ED சம்மன் கொடுக்குது… 2010ல் ஏதோ பண்ணினார் என்று சம்மன் கொடுத்து, விடிய விடிய வைத்துவிட்டு அவரிடம் விசாரணை செய்தார்கள். இதற்கு பின்னால் அரசியல் இல்லை என்று சொன்னால் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
நீதிமன்றம் மீது எந்த விமர்சனத்தை நான் வைக்கவில்லை. இதுக்கு பின்னாடி அரசியல் இருக்கு. பொன்முடி அவர்கள் தொடர்ந்து ஆளுநரை விமர்சித்து வருகிறார். அப்போ ED அவரைசம்மன் பண்ணுது. ED நடவடிக்கைகள் எல்லாம் சரியான நடவடிக்கைகள் என்று சொல்லுறீங்களா ? ED நடவடிக்கை எல்லாம் அரசியல் சாயம் பூசப்பட்ட நடவடிக்கைதான். இந்த தீர்ப்ப பத்தி கேட்டீங்கன்னா…. இந்த தீர்ப்பு நிரந்தரமான தீர்ப்பு அல்ல. இந்த தீர்ப்புக்கு ஏற்கனவே ஒரு நீதிபதி விடுதலை செய்திருக்கிறார். இப்போ இவரு தண்டனை கொடுத்துள்ளார்.
இதுக்கு மேல உச்சநீதிமன்றம் இருக்கின்றது. உச்சநீதிமன்றத்தில் முடிவு செய்யப்படும். எங்களை இந்த வழக்குகளில் இணைத்துக்கொள்ள வேண்டும் என ED சொல்றதெல்லாம் இதுவரை நடக்கவே நடக்காது. இதற்கெல்லாம் என்ன காரணம் ? அப்படின்னா…. எல்லாருக்குமே தெரியும்… பாஜகவை இந்தியா முழுக்க எதிர்க்கக் கூடிய ஒரே கட்சி திமுக. 2024ஆம் தேர்தலில் ஒரு வலுவான கூட்டணி அமைப்பதில் முக்கிய பங்கு திமுக வகிக்கின்றது. அதனால பிம்பத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.