1996 – 2001 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொன்முடிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால் எம்எல்ஏ,  அமைச்சர் பதவி பறிக்கப்படும்.  அதேபோல் தண்டனை காலம் முடிந்து 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.

கடந்த காலங்களில் அதிமுக உடைய பொதுச் செயலாளர் திருமிகு. ஜெயலலிதா அவர்கள் இதே மாதிரி சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்றார்கள். அதன் பிறகு உச்சநீதிமன்றத்தில் போய் சசிகலா,  இளவரசி சுதாகரன் உள்ளிட்டவர்களுக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டதை பார்த்தோம். திமுகவில் அதே மாதிரியான ஒரு சொத்துக்கள் தண்டிக்கப்படக்கூடிய முதல் நபராக திரு பொன்முடி இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

21ஆம் தேதி தண்டனை விவரங்கள் நீதிமன்றம் அறிவிக்கக்கூடிய சூழலில் திமுக ஆட்சி காலத்தில் DMKவினர் தொடர்ந்து வைக்கக்கூடிய  வாதம் என்னவென்றால்,  சொத்து மதிப்பு வழக்கில் நாங்கள் இதுவரை தண்டனை பெற்றதே இல்லை. அதிமுக மீதான விமர்சனங்களை….. ஜெயலலிதா மீது விசாரணைகளை வைப்பார்கள்….  ஆனால் பொன்முடி மீதான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டால் திமுக ஆட்சி காலத்திலும் பொறுப்பில் இருந்த ஒரு அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கில்  தண்டிக்கப்பட்ட முதல் அமைச்சராக அவர் இருப்பார்.

செல்வகணபதியோ,  இந்திரா குமாரி போன்ற முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் அதிமுகவில் இந்த காலகட்டத்தில் அவர்கள் மீது சொத்து வழக்கு போடப்பட்டு,  திமுக ஆட்சி காலத்தில் விசாரிக்கப்பட்டு….  தண்டனை வழங்கப்பட்டது. அதற்கு பிறகு அவர்கள் திமுகவிலும் இணைந்தார்கள். ஆனால் திமுக ஆட்சி காலத்தில் பொறுப்பேற்ற ஒரு அமைச்சர் இந்த மாதிரி தண்டனைக்கு உள்ளாவது முதல்முறையாக இருக்கும்.