
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்பாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் , நவீன வசதிகளுடன் டாஸ்மாக் கடைகள் என ஏராளமான திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மது கூடங்கள் காலி பாட்டில்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வதற்கான டெண்டர் கோரப்பட்ட நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதாவது டாஸ்மாக் கடைகளில் இருந்து காலி மது பாட்டில்களை கொள்முதல் செய்வதற்காக மட்டுமே ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் மது கூடங்களில் விட்டு செல்லும் பாட்டில்களை கொள்முதல் செய்யும் வேலை வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் மதுபான பாட்டில்களை சேகரிக்காமல் மதுபான ஊழியர்கள் கணக்கில் மாற்றங்களை செய்ய வாய்ப்புள்ளதால் பாட்டில்களில் ஸ்டிக்கருக்கு பதில் பார்கோடு ஒட்டப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதனை ஸ்கேன் செய்தால் பாட்டில்கள் கடைகளில் திரும்ப பெறப்பட்டது மற்றும் பத்து ரூபாய் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.