
சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு, 50% மாணவர் சலுகை பயண அட்டை (50% Student Concession Ticket) வழங்குவது டிசம்பர் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்தது.
மிக்ஜாக் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.