பொதுவாக இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் வங்கிகளில் பணத்தை சேமிப்பதை விட தபால் நிலையங்களில் தான் சேமித்து வருகிறார்கள். இங்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் ஆர்வத்தோடு முதலீடு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சேமிப்பு திட்டம் மற்றும் இதர தபால் துறை சேர்ந்த சேவைகள் தொடர்பாக மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

அதன்படி டிசம்பர் 14ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை போது அஞ்சல் நிலையத்தில் உள்ள தலைமை போஸ்ட் மாஸ்டர் அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது. குறைகளை தலைமை போஸ்ட் மாஸ்டர் கேட்டறிவார் . வாடிக்கையாளர்கள் சென்னை பொதுஅஞ்சல், சென்னை 60001 என்று முகவரிக்கு டிசம்பர் 13ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்னதாகவோ அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.