சென்னையில் புயல் தாக்கம் காரணமாக மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி நாளை (டிச., 5) மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளையும் அரசு பொது விடுமுறை அறிவித்த நிலையில், மெட்ரோ ரயிலானது ஞாயிற்றுக்கிழமை அட்டவணை படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சாலைகளில் பல்வேறு இடங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் மெட்ரோ ரயில்களை பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வர வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில், சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. மக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான  அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.