
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், எங்க மேலே எல்லாம் ED நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைக்கு வானத்திற்கும் பூமிக்கும் கத்துவார்கள். அன்றைக்கு எல்லாம் அமைதியாக இருந்தார்கள். இன்னைக்கு அவர்களை தேடி நடவடிக்கை வரும்பொழுது பழிவாங்குகின்ற நடவடிக்கை என்று சொல்கிறார்கள். அதை எதிர் கொள்ள வேண்டும்…. சட்டப்படி நாங்கள் எப்படி எதிர்கொண்டு வருகிறோமோ, அது போல் எதிர் கொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பல்வேறு யுகங்களும், செய்திகளும் வருகிறது. டிசம்பர், ஜனவரியில் உங்களுக்கு நான் எங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன். பழனிச்சாமி இருக்கின்ற வரை சசிகலா சொல்லுற மாதிரி ADMKவை ஒன்றனைக்க வாய்ப்பு இல்லை. பழனிச்சாமியோடு சேர்ந்து பயணிப்பதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் யாருக்கும் விருப்பமும் இல்லை.
யாரோ ஒரு சிலர் விலகிப் போகலாமே தவிர, அம்மாவின் தொண்டர்கள்…. அமமுகவில் இருப்பவர்கள்…. முக்கியமான நிர்வாகிகளாகட்டும், கீழ்மட்ட நிர்வாகிகள் 90% -க்கு மேல் நாங்கள் பழனிச்சாமியுடன் சேர்ந்து அல்லது இணைந்து பணியாற்றுவதற்கு அரசியல் ரீதியாக வாய்ப்பில்லை என்பதுதான் எங்களின் நிலைப்பாடு என தெரிவித்தார்.