
செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, எல்லா மக்களும் அவர்கள் இஷ்டத்துக்கு தொழில் செய்து, அவர்கள் பிழைப்பதற்கு உண்டான சுமுகமான சூழலை ஏற்படுத்தினால், தென்தமிழகத்தில் அண்மை காரணமாக அதிகரித்து வரக்கூடிய சம்பவங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கபட வேண்டும் என்று சொன்னால், மத்திய அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அனுப்பி வைக்க வேண்டும்.
10, 15 மாவட்டங்கள் ஜாதி ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளான பகுதி. காஷ்மீர் எப்படி தீவிரவாதத்திற்கு ஆளாகின்றதோ…. சட்டீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களிலே அங்கே தீவிரவாதத்திற்கு உட்பட்ட பகுதிகளாக இருக்கின்றதோ… அதுபோல தென்தமிழகம், ஜாதி ரீதியான அடக்குமுறைக்குட்பட்ட பகுதி…. தனிப்பட்ட முறையில் மத்திய அரசும், மாநில அரசும், இது வேறுவிதமான அணுகி சேர்ந்து செயல்பட்டால் தான் இதற்க்கு நிரந்தரமான தீர்வு வரும். சட்ட ஒழுங்கு பிரச்சனையாக அணுகினால் இதற்கு ஒரு தீர்வு வராது.
மணக்கரை கிராமத்தில் வன்முறை புதிதாக ஒன்னும் நடக்கல… 2016-ல் அதே கிராமத்தைச் சேர்ந்த மேலூர், கீழூர், வடக்கூர் என்ற மூன்று ஊர்களிலும் தேவேந்திர குல சமுதாயத்தை சார்ந்தவர்களா இருக்கின்றார்கள். சாதாரணமாக ஒரு அடி பம்பில் ஏற்பட்ட பிரச்சனைக்காக…. ஏறத்தாழ 100 வீடுகள் 2016-இல் அடித்து நொறுக்கப்பட்டன. 6 பேரை வெட்டிட்டாங்க…
இந்த சம்பவத்தில் வழக்கை முறையாக நடத்தவில்லை.. அனைவரும் அச்சுறுத்தபட்டார்கள்… ஸ்ரீவைகுண்டம் ஏரியாவில் புரோக்கர்கள் இருக்கின்றார்கள். சில புரோக்கர்களை வைத்துக்கொண்டு இந்த மக்களை மீண்டும் மீண்டும் அச்சுறுத்தல் செய்கின்றனர். இந்த நிலங்களை அபகரிக்கிறது தான் திட்டம். இதற்கான வழக்கு வந்தால், அந்த வழக்கில் தண்டனை வாங்கி கொடுக்க தாமதிக்கின்றனர்.
2014இல் நடந்த சம்பவத்தை, 2023வரை 9 வருடங்கள் இழுத்தடிக்கின்றனர்.இந்த வழக்கை நீர்த்து போக வைத்து, அதுல பாதிக்கப்பட்ட பாதி பேர் வயசாகி இறந்து போன பிறகு, ஊரை விட்டு காலி செய்த பிறகு, நிலங்களை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்கின்றார்கள். எஞ்சி இருக்கவங்க கிட்ட போய் நீ என்னத்த சாதிச்ச இந்த கேஸ்ல தண்டனை வாங்கிதரப்போற அப்படின்னு சொல்லிட்டி பேச புரோக்கர் இருக்கிறான்.
அந்த ரெண்டு பேர்ல ராஜேந்திரன் என ஒருவர் இது எல்லாம் காவல்துறையே ஹேண்டில் பண்றாங்க. புரோக்கர்ஸ், கிரிமினல்களோடு சேர்ந்து கொண்டு… சாதாரண மக்களுக்கு நீதி பெற்று கொடுப்பதற்கு பதிலாக… இந்த வழக்குகளை நீத்து போக செய்கிறார்கள். கிரிமினல் குற்றம் செய்யக்கூடியவர்களுக்கு ஏதுவாக முடிகிறது.
மணகரையில் வழக்குகள் ஒரு கிரிமினல் மீது 20க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் இருக்கு. அவன் சாதாரணமா நடமாடிட்டு இருக்கான். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்த கிராமத்தை தாண்டி வெளியூர் போய் எல்லா இடத்திலும் வன்முறையில் ஈடுபடுறாங்க. இதையெல்லாம் எப்படி அந்த மாவட்ட காவல்துறை அனுமதிக்கிறது. அல்லது தென்மண்டல ஐ.ஜி இருக்கிறாங்க. டி.ஐ.ஜி இருக்காங்க, இத்தனை காவல்துறைகள் இருக்கிறாங்க… இதில் குற்றவாளிகள், அடிமட்ட காவல்துறையில், அரசியல்வாதிகள் மூன்று பேரும் சேர்ந்து இருக்கின்றார்கள். பொலிடிசியன்ஸ், காவல்துறை, கிரிமினர்கள், புரோக்கர்ஸ் அல்டிமேட்டா மெஜாரிட்டி மக்கள் மட்டும் இருக்கணும்..
சாதாரண மக்கள் மட்டும் இல்ல…. நாடார் 90% அந்த ஊர்ல இருந்து காலி பண்ணிட்டு போயிருக்காங்க…யாதவர் காலி பண்ணிட்டு போயிருக்காங்க. இங்கு ஜாதி தான் இருக்கணும், மத்த ஜாதி எல்லாம் இருக்கக்கூடாதுன்னு இப்படி பண்ணுறாங்க… பாலஸ்தீனத்தில் இருப்பதை போல தான் நடந்துள்ளது… இதுவும் ஒரு இனப்படுகொலை. ஜாதிக்கு மேல போய், இன ரீதியான அழித்தொழிப்பு. ஒரு சாதி… ஒரு குரூப் மட்டும்தான் வாழனும்னு…. மற்றவங்க இருக்கக்கூடாது என்ற அழித்தொழிப்பு நடைபெறுகிறது.
இதை மேலோட்டமாக யாரும் அனுகக்கூடாது.இது சட்ட ஒழுங்கு பிரச்சனை இல்லை. மிக ஆழமான பிரச்சனை. இதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்த வன்முறைக்கு திட்டமிட்டு செய்யக்கூடிய மிகப்பெரிய நெட்வொர்க். அதைக் கண்டறிந்து அதற்கு தீர்வு கண்டால் ஒழியும் என தெரிவித்தார்.