
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி, இலவசங்களை முன்னிறுத்தி வெற்றி பெறுகிறார்கள் என்பது வெளி பார்வைக்கு அப்படி தெரிகிறது. இலவசங்கள் என்பது எல்லைக்கு உட்பட்டது தான். ஒரு மாநில அரசு சமூக நலத்திட்டங்கள் என்று ஆற்ற வேண்டிய கடமை அதற்கு இருக்கிறது. சமூகநல அமைச்சர் என்றே ஒரு அமைச்சரை நாம் வைத்திருக்கிறோம். அந்த சமூக நலத்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்வார்களோ,
அந்த அளவிற்கு தான் அது அறிவிக்கப்படுகின்றது. இந்தியா போன்ற நாடுகளில் சமூக நல திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டியது மிக அவசியம். அமெரிக்காவிலே கூட இருக்கு. அமெரிக்காவில் பால் கறக்குற மாடு வளர்த்தால் அவர்களுக்கு மானியம் உண்டு.
அமெரிக்கா போன்ற மிகப் பெரிய வல்லரசுகளில் மாடு வளர்த்தாலே மானியம் உண்டு. ஆனால் நம்மைப் போன்ற ஏழை நாடுகளில்…. வளரும் நாடுகளில்…. வளர்ந்து கொண்டிருக்கின்ற நாடுகளில்…. சமூக நலத் திட்டங்கள் என்பது அவசியம். அதை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். குஷ்பூ அவர்கள் எதற்காக திமுகவில் சேர்ந்தார் ? திமுகவிலிருந்து காங்கிரசுக்கு எதற்காக வந்தார் ? அப்படியே காங்கிரசிலிருந்து ஏன் பிஜேபிக்கு போனார் ? இத்தோடு அவர்களுடைய பயணம் நின்று விடுமா ? இன்னும் அவருடைய பயணம் தொடருமா ? ஒரு கருத்தை சொல்லுகிற போது….
இயன்றவரை பிரச்சனை வராமல் கருத்து சொல்வது தான் சிறப்பு. நீங்க எதற்காக அந்த உவமையை அவர் சொன்னார். அந்த உவமையை சொல்லிவிட்டு, அது பிரஞ்சு மொழியில் இருக்கிறது என்று சொல்லுகிறார். பிரஞ்சு மொழியில் இருக்கிறதை இதோடு, சம்பந்தப்படுத்தி சொல்வதற்கு என்ன தொடர்பு இருக்கிறது ?
பிரஞ்சு மொழியை பற்றி எல்லோ இலக்கிய கூட்டமாக இருந்தால் அவர் அதைப்பற்றி சொல்லி இருக்கலாம். அவர் சொல்லியதற்கும் அந்த பிரெஞ்சு மொழிக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா ? அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் முடிச்சு போடுற மாதிரி ஒரு வார்த்தையை சொல்லிட்டு, கேட்டா இது பிரஞ்சு மொழி என்கிறார்கள். எனக்கு தெரிஞ்சி கேட்டா அவர்களிளிடம் தமிழ்ல தான் உங்ககிட்ட கேள்வி கேட்டாங்க….
தமிழ்ல தான் ஒரு பதில் சொன்னார். இதற்காக அவர் மீது வருத்தப்படுகிற போது அல்லது கண்டனத்தை தெரிவிக்கிற பொழுது…. அதற்கு ஒரு நல்ல பதில் சொல்ல வேண்டுமே ஒழிய, நான் காத்திருக்கிறேன் என்கின்ற பதிலை அவர் சொல்லக்கூடாது, அது தவறு என தெரிவித்தார்.