
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ADMK கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கூட்டத்தில் பேசினோம். எங்களை பொறுத்தவரை என்ன ? இன்றைக்கு கடுமையான அதிருப்தி இருக்கின்றது. திமுக அரசு மூலம் கடுமையான அதிருப்தி இருக்கிறது. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள், நிறைவேற்றாத நிலையை நிச்சயமாக சொல்வோம். சட்ட ஒழுங்கு எப்படி இருக்கிறது ?
இன்றைக்கு சந்தி சிரிக்கின்ற அளவிற்கு... மக்கள் வாழ முடியாத சூழல் இருந்து கொண்டிருக்கிறது. அதை நிச்சயமாக சொல்லுவோம். விலைவாசி குறைந்திருக்கிறதா ? விலைவாசி ஏறிக் கொண்டிருக்கிறது… அது குறைப்பதற்கு என்ன நடவடிக்கை இல்லை ? அது நிச்சயமாக சொல்வோம். அதேபோல இன்றைக்கு பல வாக்குறுதிகள்….
குறிப்பாக டீசல் மானியம் 4 ரூபாய் தருவோம் என்றார்கள். அது தரவில்லை… முதியோருக்கு 1000திலிருந்து 1500ஆக உயர்த்துவோம் என்றார்கள். அதுவும் தரவில்லை…. இன்றைக்கு வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு. எல்லாம் உயர்ந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்ற நிலைமை… சிலிண்டருக்கு மாதம் 100 ரூபாய் தருகிறேன் என்று சொன்னார். அந்த 100 ரூபாயும் தரவில்லை என தெரிவித்தார்.