செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, இந்து சமய அறநிலைத்துறை என்பது இன்றைக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் ஆட்சி என்பது இந்துக்களுக்கும்,  பாதுகாப்பான ஆட்சி ஆன்மீகத்திற்கு எல்லா வகையிலும் சிறப்பு சேர்க்கின்ற ஆட்சி அதை போல் ஆன்மீகத்தை வளர்க்கின்ற நோக்கில் சிவராத்திரி என்பது இதுவரையில் துறையின் சார்பிலேயே கொண்டாடப்படவில்லை. முதன்முறையாக மயிலாப்பூரிலேயே சிவராத்திரியை கொண்டாடினோம். அடுத்த ஆண்டு கடந்த ஆண்டு ஐந்து திருக்கோயில்களில் அந்த நிகழ்ச்சியை விரிவுப்படுத்தினோம்.

இந்த ஆண்டு முதல் முதலாக நவராத்திரி உற்சவம் பத்து நாட்கள் தனியாக மயிலாப்பூரில் அமைந்திருக்கின்ற திருக்கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் பத்து நாட்கள் 10 அம்மன் சிலைகளே பிரசித்தி பெற்ற கோயில்கள் உடைய சிலைகளை இங்கு பிரசித்தி செய்து பல்லாயிரம் கணக்கான மக்கள் நவராத்திரி நிகழ்ச்சியை கொண்டாடும் வகையில் நவராத்திரி விழாவை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

இதுபோல் எண்ணற்ற சாதனைகளை… எண்ணற்ற திட்டங்களை மக்கள் விரும்புகின்றனர்…  பக்தர்கள் விரும்புகின்ற அனைத்து வசதிகளோடு ஆன்மீகப் புரட்சி என்று சொல்லப்படுகின்ற வகையிலே இந்து சமய அறநிலைத்துறை  மாண்புமிகு  தமிழக முதல்வர் வழிகாட்டுதலின் படி ஒரு பெரிய வரலாற்றைப் படைக்கின்ற ஒரு பொற்கால ஆட்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வள்ளலார் அருள் பெறும் ஜோதி, அருள் பெரும் ஜோதி…. தனிப்பெருங்கருணை,  தனிப்பெருங்கருணை…. என்று கூறிய வள்ளலாருக்கு சர்வதேச மையத்தின் சார்பில்  நூறு கோடி ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படுகின்றது என்ற மகிழ்ச்சியையும் இதோடு பகிர்கிறேன்.

இப்படி இந்து சமய அறநிலைத்துறை ஆற்றுகின்ற பணிகளை சொல்ல முற்பட்டால்,  ஒரு நாள்  போதாது என்ற வகையிலே பல சாதனைகளை பல ஆன்மீக புரட்சிகளை இந்த ஆட்சி செய்து கொண்டு வருகிறது. மேலும் மாண்புமிகு தமிழக முதல்வருடைய ஆதரவு கரங்களோடு பல்வேறு வகையில் இந்த ஆட்சி… இந்து சமய அறநிலை துறைக்கு…. இந்துக்களுக்கு…. இறை வழிபாடு மேற்கொள்கின்ற இறை அன்பர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.