செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியிலே இருக்கின்ற அவலங்களை மக்களிடத்தில் எடுத்து சொல்வோம். இந்த ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு மிகப்பெரிய சுமை தான் சுமத்தி இருக்கின்றார்கள். மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் இந்த ஆட்சியில் கிடைக்கவில்லை என்பதுதான் எதார்த்த உண்மை.

மக்கள் இதையெல்லாம் நன்கு புரிந்து இருக்கின்றார்கள்.  இன்றைக்கு விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்குலைவு,  எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் நடமாட்டம்…  இப்படிப்பட்ட நிலைமையில் இந்த ஆட்சி தொடர்கிறது. இந்த ஆட்சி வந்த பிறகு மக்கள் இனி பத்தாண்டுகளுக்கு பிறகு வந்திருக்கின்றார்கள்.  நிறைய திட்டங்கள் செய்வார்கள் என நினைத்தார்கள். இதுவரை ஒரு திட்டமும் செய்யவில்லை.

கோயம்புத்தூர் எடுத்துக்கோங்க….  ஒரு திட்டமாவது கொண்டு வந்திருக்காங்களா ? எல்லாமே மாண்புமிகு அம்மாவுடைய அரசு இருக்கின்ற போது… புரட்சி தலைவி அம்மா அரசு இருக்கின்ற பொழுது  கொண்டு வந்த திட்டத்தை தான் அடிக்கல் நாட்டிக் கிட்டு இருக்காங்க. அப்ப கொண்டு வந்த திட்டம்,  பணிகள் நிறைவு பெற்று…  இன்றைய முதலமைச்சர் ஸ்டிக்கர் ஒட்டி , திறப்பு விழா பண்ணிட்டு இருக்காரு… இதுதான் செஞ்சது.

வேற என்ன சாதனை செஞ்சாங்க ? அதோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி இருக்கின்ற பொழுது 2021ல் 5 லட்சத்து 15 ஆயிரம் கோடி கடன் இருந்தது. அப்போ முதலமைச்சர் பொறுப்பெற்ற உடன் சொன்னாரு. நிதி மேலாண்மை சரி செய்யப்படும் என சொன்னாரு. இதற்கு நிபுணர் குழு அமைக்கப்படும்னு சொன்னாரு. நிபுணர் குழு அமைச்சாங்க. அமைத்த பிறகு இப்பொழுது 2 லட்சத்து 32 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்காங்க.

கடன் வாங்குவதற்கு தான் நிபுணர் குழு அமைச்சாங்க இந்த அரசாங்கம்… இந்த இரண்டு லட்சத்து 32 ஆயிரம் கோடி கடன் வாங்கி,  என்ன திட்டம் கொண்டு வந்தீங்க ? அதனால மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது ?  இதெல்லாம் நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லி,  வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 இடங்களிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.