
என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, சகோதர – சகோதரிகள் நீங்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். திமுக இப்பொழுது ஆறாவது முறை ஆட்சியில் இருக்கிறார்கள். ஐந்து முறை திமுக ஆட்சியில் இருந்து விட்டு, ஆறாவது முறை ஆட்சியில் இருக்கின்றார்கள். ஒரு முறை… இரண்டு முறை.. இல்லை. நான் கேட்கிற கேள்விக்கு யாராவது சரியாக பதில் சொன்னீர்கள் என்றால்,
அந்த சகோதர – சகோதரிக்கு நான் ஒரு பரிசு கொடுக்கிறேன். ஆறு முறை திமுக ஆட்சியில் இருந்து…. 1965இல் இருந்து ஆட்சியில் இருந்து…. திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்திற்கு கொண்டு வந்த அரசு மருத்துவ கல்லூரிகள் எத்தனை ? 6 முறை ஆட்சியில் இருந்து தமிழகத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த பொழுது கொண்டு வந்த அரசு மருத்துவக் கல்லூரி எத்தனை ?
திமுகவை மொத்தமாக கொண்டு வந்தது 5. பின்னாடி அருமையாக சொன்னீர்கள் ஐந்து. திமுக கொண்டு வந்த தனியார் மருத்துவக் கல்லூரி 17. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதில் மணச்சநல்லூர் MLA கதிரவனினுடைய தனலட்சுமி சீனிவாசன் தனியார் மருத்துவ கல்லூரி…. தனியாருக்கு எல்லாம் நீங்கள் கல்லூரி கொடுத்தால் தான் 50% சீட்டை டோனேஷன், கேபிடேஷன் பீஸ் என 5 கோடி ரூபாய்க்கு விற்கலாம்.
அரசு மருத்துவக் கல்லூரி ஆரம்பித்தீர்கள் என்றால், விற்க முடியாது. ஆனால் மோடி ஐயா தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் கொடுத்த அரசு மருத்துவக் கல்லூரி எவ்வளவு ? 11 . 6 டைம் ஆட்சியில் இருந்து… 1967லிருந்து நீங்க கொண்டு வந்தது 5. நாங்கள் ஒன்பது வருடம் ஆட்சி இருந்து தமிழ்நாட்டிற்கு ஒரே கையெழுத்தில் கொண்டு வந்தது 11. இதில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் நீட் டிராமா ? என்னவென்று புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.