செய்தியளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் முழுமைபெறவில்லை என ஆளுநர் ஆர்.என் ரவி கூறியதன் மூலம்பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.  இதற்கு பதில் அதுதான். இந்த அரசமைப்புச் சட்டத்தையே மாற்ற வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் இன் கொள்கை.

அவங்க காசியில் கூடி,  இதுக்காக இதுவரை 700 பக்கம் அவங்க புதிய அரசியல் சட்டமே எழுதிவிட்டார்கள். அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்திற்கு மாற்றாக மகாத்மா காந்தியும்,  ஜவஹர்லால் நேருவும் எந்த வழிகாட்டுதலும் கொடுத்து ஒரு அரசியல் சட்டம் இயற்றப்பட்டதோ…. அதற்கு எதிராக…..

யாரெல்லாம் தங்களுடைய உயிரை பணயம் வைத்து இந்த நாட்டிற்கு சுதந்திரம் அடைந்து….  ஒரு அரசியல் சட்டத்தை உருவாக்கினார்களோ, அதற்கு எதிராக…. ஜாதி – மதம் – மொழியை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் சட்டம் வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் விரும்புகிறது.

அதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஒரு சட்டம் என்று சொல்வது மற்றொரு குற்றம்.  அதற்கும் அவர் மீது வழக்கு தொடரலாம். அவருக்கு சிறை தண்டனை கூட கொடுக்கலாம்,  தப்பில்லை. தனித்து போட்டியிட டைம் வரும்போது உங்ககிட்ட சொல்றேன்,  எழுதுங்க என்று தெரிவித்தார்.