விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ”அமைப்பாய்த் திரள்வோம்” கட்டுரை தொகுப்பு,  முழக்கம் பாடல் வெளியீட்டு  நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல், திருமாவளவன், ”அமைப்பாய் திரளுவோம்” என்ற முழக்கம் அதிலிருந்து தான் எழுந்தது அண்ணன் ஜவகர் கூட என்ன சொன்னாருன்னா…? இது ஒரு  முழக்கம் மாதிரி இருக்கு….  ஏதாவது வேற பெயர் சொல்லுங்க…  ஒரு கேப்சென் மாதிரி தான் இருக்கே தவிர,  ஒரு புத்தகத்துக்கான தலைப்பு மாதிரி இல்ல அப்படின்னாரு….  நான் அதுல காம்ப்ரமைஸ் ஆகல…  அண்ணே இப்படியே இருக்கட்டும்னு ”அமைப்பாய் திரளுவோம்”ன்னு இருக்கட்டும்னுன்னு சொன்னேன்…

அதுக்கப்புறம் அவர் ஒத்துக்கிட்டாரு. அண்ணே என்ன சொன்னாரு எண்ட் ஆஃப் பண்ணாரு ? எம்ஜிஆருக்கு இயல்பாய் ரெட்ட இலை ஒரு சின்னம் அமைந்தது. அவருக்கு இயல்பாய்  ரெண்டு விரலை காட்டுவதற்கு ஒரே வாய்ப்பு அமைஞ்சு போச்சு. எங்களுக்கு எத்தனையோ பத்திரிகைகள் இருந்தாலும்,  நக்கீரன் என ஒரு பெயரு அமைந்து பாருங்க…  அந்தப் பேரு அமைஞ்சது ஒரு பெரிய வாய்ப்பு. அந்த மாதிரி உங்களுக்கு ”’அமைப்பாய் திரளுவோம்” என்கிற முழக்கம் கிடைத்திருக்கிறது..

இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அப்படின்னு அவர் சொன்னாரு…..  எனக்கு இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.அப்படின்னு நான் நினைக்கல…. ஆனால் எனக்குள்ள இந்த அமைப்பாய் திரளுவோம் அதுதான் பாயிண்ட்…. ஒரு மிக முக்கியமான பிறந்தநாளில் இந்த முழக்கத்தை முன் வைத்தேன் என நினைக்கின்றேன்….. அமைப்பாய் திரளுவோம்,  அங்கீகாரம் பெறுவோம், அதிகாரம் வெல்வோம். இது ஒரு படிநிலை… அருமை தோழர்களே…. இதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த நூலை நீங்கள் மற்றவர்களிடம் கொண்டு போய் சேருங்கள் என்று சொல்லுவதை விட, நீங்கள் படியுங்கள் என தெரிவித்தார்.