செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் GK வாசன், புதிய தொழிற்சாலைகள் வரக்கூடிய நிலை ஏற்பட்டு…  தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக… அவர்களுடைய வாழ்வாதாரம் உறுதிப்படுத்தக் கூடிய நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று  தாமாக சார்பில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழகத்தினுடைய சட்டம்,  ஒழுங்கு நிலை கேள்விக்குறியாகவே இருக்கிறது. தொடர்ந்து பல இடங்களிலே கொலை, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு, போதைப்பொருள், பாலியல் தொந்தரவுகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

தொலைக்காட்சி பத்திரிக்கை செய்தியை எடுத்துக்காட்டாக வைத்துக் கொள்ளலாம். சென்னையிலே கூட இரண்டு நாட்களுக்கு முன்பு போதை பொருள் அருந்திவிட்டு, காரிலே வேகமாக சென்று…  விபத்து ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை முழுமையாக காவல்துறை தடுக்கவில்லை.

அதற்கு சுதந்திரத்தை ஏன் அரசு கொடுக்கவில்லை என்று நான் கேட்க விரும்புகிறேன்.தமிழகத்தினுடைய சட்டம் – ஒழுங்கை சரி செய்வது அரசினுடைய கடமை. தவறு செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு அவர்கள் அடக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.