
என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் விவசாயம் செய்தால், உங்களுடைய விளை நிலங்களை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தால்….. உங்களுக்கு தமிழக அரசு கொடுக்கக்கூடிய பரிசு குண்டாஸ் சட்டம். திருவண்ணாமலையில் 7 விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போட்டிருக்கிறார்கள்.
இதுவரை தமிழ்நாட்டில் குண்டாஸ் சட்டம் யார் மேல் எல்லாம் போட்டிருக்கிறார்கள் என்றால், மணல் திருடியவன், பெண்களின் மீது குற்றம் செய்தவன், இது போன்ற வன்கொடுமைகள் யார் செய்திருக்கிறார்களோ… அவர்கள் மீது போடப்பட வேண்டிய குண்டாஸ் வழக்கு, திமுகவில் பாதி பேர் மேல் குண்டாஸ் வழக்கு போட வேண்டும்.
ஆனால் இன்று குண்டாஸ் வழக்கு யார் மேல் போடுகிறார்கள் என்றால், விவசாய பெருமக்கள் மக்கள் மீது…. திருவண்ணாமலையில் 7 விவசாய பெரு மக்கள் மீது எதற்காக குண்டாஸ் வழக்கு போடப்பட்டது ? 125 நாளாக அங்கு இருக்கக்கூடிய விவசாய பெருமக்கள் தங்களுடைய விளைநிலத்தை மாநில அரசினுடைய சிப்கார்ட்டுக்கு கொடுக்க மாட்டேம். தண்ணீர் இருக்கக்கூடிய விவசாய நிலத்தில், நாங்கள் விவசாயம் செய்யப் போகின்றோம்.
அதற்காக 125 நாட்களாக தன்னுடைய விவசாய நிலத்திலே அமர்த்து போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்… போராட்டத்தை உடைக்க முடியவில்லை…. விவசாயிகளை பிரிக்க முடியவில்லை…. விவசாயிகள் தனித்தனி குரூப்பாக இவர்களால் ஆக்க முடியவில்லை. அதனால் யார் இந்த போராட்டத்தை முன் நின்று நடத்தினார்களோ அவர்கள் ஏழு பேர் மீது குண்டாஸ் சட்டம் போட்டு இருக்கிறார்கள் என பேசினார்.